July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியைப் பயன்படுத்த இலங்கை ஒளடதக் கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதி

கொரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியைப் பயன்படுத்த இலங்கை ஒளடதக் கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த தடுப்பூசியை இலங்கையில் அவசர பாவனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருந்து ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியைப் பயன்படுத்த இதுவரையில் 40 க்கும் அதிகமான நாடுகள் அங்கீகாரமளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசி கொரோனா வைரஸில் இருந்து 91.6 வீதம் பாதுகாப்பளிக்கக் கூடியது என்று ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு தடவைகள் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இறக்குமதி தொடர்பான பேச்சுவார்த்தையில் இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.