January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!

வடமாகாண காணிகளின் ஆவணங்களை அனுராதபுரத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அதன் நுழைவாயிலை மறித்தவாறு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வடமாகாண காணிகள் தொடர்பான ஆவணங்களை அனுராதபுரத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்துக்கு மாற்றும் திட்டத்தை உடனடியாக அதிகாரிகள் கைவிட வேண்டுமென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.