May 23, 2025 4:51:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிம் அட்டைகள் கொள்வனவில் கட்டுப்பாடு

இலங்கையில் கைத்தொலைபேசிகளுக்காக பிரஜை ஒருவரினால் கொள்வனவு செய்யக் கூடிய சிம் அட்டைகளின் எண்ணிக்கையை வரையறுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய ஒருவரினால் 5 சிம் அட்டைகளுக்கு மேல் கொள்வனவு செய்ய முடியாத வகையில் வரையறைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிம் அட்டைகளை பயன்படுத்தி இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறாக வரையறைகளை விதிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பான சட்ட திட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.