உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஹிஜாஸை 11 மாதங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதேநேரம், குறித்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட மதரஸா பாடசாலையின் அதிபரையும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.