நுவரெலியாவை சேர்ந்த புகழ்பெற்ற தோட்ட உரிமையாளர் இராணுவத்தனரின் விடுமுறையை களிப்பதற்காக தமக்கு சொந்தமான நிலப்பகுதியை பரிசாக வழங்கியுள்ளார்.
கந்தபொலை கோர்ட் லாட்ஜ் தோட்டத்தில் வசிக்கும் திரு.திருமதி தொன் பேர்னார்ட் அலோசியஸ் தம்பதியினரே நுவரெலியாவில் தமக்கு சொந்தமான 180.2 பேர்ச்சஸ் காணியை இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் கையளித்துள்ளனர்.
தாய்நாட்டின் பாதுகாவலராக இருந்துவரும் இராணுவத்தின் ஒப்பற்ற சேவையை பாராட்டியும் அவர்களின் அர்பணிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் தமது சொத்தை பரிசளிப்பதாக கூறியுள்ளனர்.
நன்கொடையாளர்கள், தமது மூதாதையர்களிடமிருந்து சொத்துக்களைப் பெற்றுள்ளதுடன், பிரித்தானிய காலனித்துவ காலங்களில் பெறப்பட்ட காணிகள் இவை எனவும் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் இயற்கை எழில் மிக்க இந்த காணியை பரிசளித்தமைக்கு நன்றியையும் பாராட்டினையும் தெரிவிப்பதாக ஜெனரல் சவேந்திர சில்வா நன்கொடை வழங்கிய தம்பதியிடம் கூறியுள்ளார்.