இலங்கையில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை முழுமையான ஒன்றாக இல்லை” என்று பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தாக்குதல் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதற்காக அரசாங்கம் சர்வதேச நாடுகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இதேநேரம், இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.