இலங்கையில் மின்சார தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக தனியார் துறையிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் வறட்சியுடன் கூடிய காலநிலையால், நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், எதிர்காலத்தில் மின் துண்டிப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே, தனியார் துறையிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையில் நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான தேவை ஏற்படவில்லை என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“அவசர தேவைகளின் போது மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே நாம் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்தோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்படும் திடீர் மின் துண்டிப்புகள் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.