ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு நிறுவனத்தின் “ஜய்கா” (JICA) நிதி உதவியில் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்ட இலகு ரயில் (Light rail) கட்டமைப்பு திட்டத்தை இரத்து செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேல் மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட நகர் பிரதேசங்களில் இலகு ரயில் கட்டமைப்பு (LRT) திட்டத்தை செயற்படுத்த முன்னைய நல்லாட்சி அரசாங்கம் “ஜய்கா” நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்திருந்தது.
எனினும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வீடுகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பெருமளவிலான கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டி வரும்.
அத்துடன் உயரத்தில் ரயில் பாதையை அமைக்க பெரும் தொகை நிதிச் செலவும் ஏற்படும் என்று தற்போதைய அரசாங்கம் கண்டறிந்துள்ளது.
போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்தில் கொண்டு அந்த திட்டத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.