
பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்தி வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அரசு வழங்கக்கூடாது என்றும் தனித்தமிழீழம் உருவாக இடமளிக்கக்கூடாது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
மாகாண சபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது புதிய முறைமையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அல்லது புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்ட பின்னர் அதில் தெரிவிக்கப்படும் பரிந்துரைக்கமைய மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். இது ஜனாதிபதியிடம் நான் முன்வைக்கும் பணிவான வேண்டுகோள்.
நாட்டின் தற்போதைய நிலைமையில் தேர்தலொன்று தேவையற்ற விடயம். இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அல்லது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் மிரட்டல்களுக்கு அஞ்சி இலங்கையில் அவசரப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது என்ற செய்தி வெளியில் வரக்கூடாது.இதைக் கவனத்தில்கொண்டு ஜனாதிபதி தலைமையிலான அரசு செயற்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.