ஈஸ்டர் தாக்குதல்களை தடுக்க தவறியமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறையில் அடைக்கப்பட வேண்டுமானால் அந்த தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகள் தூக்கு மேடையில் பகிரங்கமாக ஏற்றப்படவேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
எந்தவொரு பத்திரிகையாளரை அல்லது எதிரியைக் கொல்லாத ஒரே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே.அவர் எவரையும் காணாமல் ஆக்கவோ அல்லது எந்த அமைப்புக்கும் தீ வைக்கவோ,தன்னை கேலி செய்த எவருக்கும் பதிலடி கொடுக்கவோ இல்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை குண்டர்கள், போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாலியல் வல்லுறவாளர்கள், மோசடிக்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவித்தவர் மைத்திரிபால சிறிசேனவே.
அதேபோல்,பேராசிரியர் விஸ்வ வர்ணபால, பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச மற்றும் கலாநிதி சுரேன் ராகவன் போன்றவர்களை தலைமைப் பதவிகளுக்கு வியமித்தவரும் அவரே என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.