January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா: இந்தியா நியாயத்தின் பக்கம் இருந்து இலங்கையை ஆதரிக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் கெஹெலிய

ஐநா விவகாரத்தில் இந்தியா நியாயத்தின் பக்கம் இருந்து இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான பிரேரணையில் இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் ஐநா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வெற்றி பெறுமென்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.