file photo: Facebook/ Maithripala Sirisena
நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2019 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்னவின் தலைமையின் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.