
இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு நாடுகளுக்கு இடையில் சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான முத்தரப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசனை செயலகம் கொழும்பில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் இயங்கும் வகையில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் மூன்று நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான முத்தரப்பு கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண, வெளிவிவகார அமைமச்சின் செயலாளர் அத்மிரல் ஜயநாத் கொலம்பகே, கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன மற்றும் இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளின் பாதுகாப்பு பிரதிநிதிகள் ஆகியோர் இந்த அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.