அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளின் இறுதி அறிக்கைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கைக்கு எதிராக நான்கு சட்டத்தரணிகள் பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டத்தரணிகள் நால்வரும் பிரதம நீதியரசருக்கு எழுத்து மூலம் முறையிட்டுள்ளனர்.
இறுதி அறிக்கை மூலம் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெறுகின்றதா என்பதை ஆராயுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளின் இறுதி அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அதன் பரிந்துரைகளை அமுல்படுத்த இன்னுமோர் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை ஏற்கனவே நீதிமன்றங்களில் வழங்கப்பட்டுள்ள வழக்குத் தீர்ப்புகளை சவாலுக்குப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.