May 23, 2025 14:19:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் பொதி ஒன்றில் இருந்து சடலம் மீட்பு

File Photo

கொழும்பு, டேம் வீதி பகுதியில் வீதியோரத்தில் பயணப் பொதியொன்றுக்குள் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான பொதி தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அதனை சோதனையிட்ட போது, அதற்குள் சடலமொன்று இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த சடலம் பெண்ணொருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த இடத்திற்கு விரைந்துள்ள குற்ற விசாரணைப் பிரிவினர் அது தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.