November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை மீது சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்’: தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ICC) விசாரணைக்கு உட்படுத்த பிரிட்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் அம்பிகை செல்வகுமார் என்ற பெண் முன்னெடுத்துள்ள ‘சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம்’ மூன்றாவது நாளாகத் தொடர்கின்றது.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்தை கொண்டுவருகின்ற பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிடம் அம்பிகை செல்வகுமார் 4 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்:

1. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தி போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய ஐநா பாதுகாப்பு பேரவைக்கும் பொதுச் சபைக்கும் பரிந்துரை செய்ய வேண்டும்.

2. குற்றவியல் வழக்குக்காக சர்வதேச குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்படக்கூடிய விதத்தில், மியன்மார், சிரியா போன்ற நாடுகள் மீதான விசாரணைகளை ஒத்த சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று நிறுவப்பட வேண்டும். அந்தப் பொறிமுறைக்கு அர்த்தபூர்வமான கால அட்டவணை இருக்க வேண்டும்.