
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தெற்கின் சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்துக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ, வட மசடோனியா, மலாவி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குழு இலங்கை மீதான தீர்மானத்தின் முதலாவது வரைபை முன்வைத்துள்ளன.
இலங்கை இராணுவத்தை சர்வதேச நீதிமன்றங்களில் முன்நிறுத்தும் தீர்மானத்தை ஐநா கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேநேரம், குறித்த சிவில் சமூக அமைப்புகள் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் மனுவொன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.