January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துகளில் 12 பேர் பலி!

இலங்கை, களனி, வனவாசல ரயில் கடவையில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று ரயிலுடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 09.35 மணியளவில், வத்தளையிலிருந்து தொரண வீதிக்கு சென்று கொண்டிருந்த பஸ்ஸூடன் பொல்கஹாவெலவிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயில் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

ரயில் கடவைக்கு அருகில் நின்றிருந்த இருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸில் பயணித்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவிலை  என பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரித்துவருவதாக பொலிஸார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்கள் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பலியானவர்களில் நான்கு பாதசாரிகள், முச்சக்கர வண்டிகளில் பயணித்த நால்வர் மற்றும் சைக்கிளில் பயணித்த இருவரும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளின் அலட்சியம் காரணமாக தற்போது வீதி விபத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.