
இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்யும் யோசனைக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையில், உள்ளூர் பசும்பால் தொழிற்துறையை ஊக்குவிக்கும் நோக்கிலேயே மாடறுப்புக்கு தடை விதிப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.
மாட்டிறைச்சியை உண்ணும் மக்களுக்கு தேவையான அளவு இறக்குமதி செய்து நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விவசாய நடவடிக்கைகளில் பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத, வயதான பசுக்களை பராமரிக்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.