July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜோன்சன் அன்ட் ஜோன்சன்’ தடுப்பூசியை பரீட்சிக்க தயாராகிறது இலங்கை!

(Photo : jnj)

கொரோனாவுக்கு எதிகாக ஒரே டோஸில் சிறந்த செயல் திறனை காண்பிப்பதாக கூறப்படும் ‘ஜோன்சன் அன்ட் ஜோன்சன்’ தடுப்பூசியை பரீட்சிக்க இலங்கை தயாராக இருப்பதாக டெய்லி மிரர் நாளிதழிடம் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஒற்றை டோஸ் கொவிட் -19 தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் இலங்கை கவனம் செலுத்தியுள்ளது.

எனினும் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதியை வழங்கும் பட்சத்தில் ‘ஜோன்சன் அன்ட் ஜோன்சன்’ தடுப்பூசி பரீசிக்கப்படும் சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் டெய்லி மிரர் நாளிதழிடம் மேலும் குறிப்பிட்டுள்ளன.

இந்த தடுப்பூசியானது, ஏனையதடுப்பூசிகளை விடவும் குறைவான விலையில் கிடைப்பதாகவும் இதனை உறைவிப்பானுக்கு பதிலாக குளிர்சாதன பெட்டியில் சேமிக்க முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், இதுவரை தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு ஒற்றை டோஸ் ‘ஜோன்சன் அன்ட் ஜோன்சன்’ கொரோனா வைரஸ் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் கோரும் விண்ணப்பம் கிடைக்கவில்லை என அதன் தலைமை நிர்வாக அதிகாரி வைத்தியர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ‘பாரத் -பயோடெக்’, ரஷ்யாவிலிருந்து ‘ஸ்பூட்னிக் 5’ தடுப்பூசி மற்றும் சீனாவிலிருந்து ‘சினோபார்ம்’ தடுப்பூசி ஆகியவற்றின் ஒப்புதல் கோரும் விண்ணப்பங்கள் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு கிடைக்கப்பபெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் ‘ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசி பயன்படுத்த ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ‘பைசர்- பயோன்டெக்’ தடுப்பூசி தொடர்பாக பைசருடன் சில கலந்துரையாடல்கள் நடந்துள்ளன எனவும் வைத்தியர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் பைசரிடமிருந்தும் ஒப்புதல் கோரும் விண்ணப்பங்கள் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு இதுவரை கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.