இலங்கை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் அரசாங்கம் சில திருத்தங்களை முன்வைக்க உள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் குழுநிலையின் போது அந்தத் திருத்தங்களை முன்வைப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 7 மனுக்கள் மாத்திரமே ஆராயப்பட்டுள்ளன. மற்றைய மனுக்கள் நாளை ஆராயப்படவுள்ளன.