
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கிடைக்காமையை முன்னிறுத்தி எதிர்வரும் 7 ஆம் திகதியை கறுப்பு ஞாயிறாக அனுஷ்டிக்கும்படி கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உறவுகளை இழந்த அனைத்து தரப்பினருக்கும் நீதி கோரும் போராட்டமாகக் கறுப்பு ஞாயிறு தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினத்தில் கத்தோலிக்க மக்கள் கறுப்பு நிறத்தில் உடை அணிந்து சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளும்படியும் கொழும்பு பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிக்கை பல தரப்பினராலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.