February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்

Photo: Twitter/Sri Lanka Cricket

இலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 மார்ச் முதலாம் திகதி முதல் இவர் அணியின் பணிப்பாளராக செயற்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தொழிநுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய மூன்று வருட ஒப்பந்த அடிப்படையில் டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

புதிய கிரிக்கெட் பணிப்பாளர் அணியின் எதிர்கால சுற்றுப் பயணங்கள் தொடர்பாக ஆராய்தல், வீரர்களின் நலன் மற்றும் திறன் மேம்பாடு தொடர்பாகவும் பயிற்சிகள் தொடர்பாகவும் ஆராய்தல் ஆகியன தொடர்பாக கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரெலியா அணியின் முன்னாள் வீரரான டொம் மூடி, 2007 உலகக் கிண்ணக் காலத்தில் இலங்கை கிரிக்கெட்டின் தேசிய பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.