November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிடம் இருந்து பெற்று வந்த கொவிட் -19 தடுப்பூசிகளை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

(FilePhoto)

இந்தியாவில் இருந்து இதுவரை காலமாகப் பெற்றுக்கொண்ட ‘ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ கொவிட்-19 தடுப்பூசிகளை இனிமேல் பிரித்தானியாவின் பிரதான நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மருந்து தயாரிப்பு, விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் ஆரம்பத்தில் ஒப்பந்தமொன்றை செய்துகொண்டு இலங்கைக்கு 18 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தபோதும், அவர்களால் 10 மில்லியன் தடுப்பூசிகளையே வழங்க முடியும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பிரித்தானியாவில் உள்ள பிரதான நிறுவனத்திடம் கலந்துரையாடியுள்ளோம்.

அத்தோடு அவர்கள் எமக்கு கேட்கும் தொகையை தருவதாகக் கூறியதையடுத்து பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் நிறுவனத்தில் இருந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள தீர்மானம் எடுத்தோம்” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய  ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா  கொவிட் -19 தடுப்பூசிகளை பிரித்தானியாவின் பிரதான நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.