
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தக்கோரி தொடர்ச்சியான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றுக்கு சர்வதேச நீதி வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபு வழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் மதத் தலைவர்களும் இனைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.