
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 52 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் 150 கைதிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்தச் சிறைச்சாலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கைதிகளுடன் நெருக்கமாக பழகிய கைதிகளும் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணிய சிறைச்சாலை அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிட கடந்த நாட்களில் வந்த அவர்களின் உறவினர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.