May 25, 2025 13:20:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண சபைகளுக்கான தேர்தலை ஜுன் மாதத்தில் நடத்த அரசாங்கம் யோசனை

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விரைவில் வெளியிடவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளதாகவும் இதன்போது, அவர் இது தொடர்பாக அறிவிக்கலாம் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து வருடங்கள் கடந்துள்ள போதும், அந்த சபைகளுக்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ஜுன் மாதத்தில் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்காக திருத்தங்களை மேற்கொண்ட போதும், எல்லை நிர்ணயம் அறிக்கை தொடர்பான பிரச்சனைகளால் அந்த திருத்தத்தை செயற்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கம் ஏற்கனவே இருந்த விகிதாசார முறையிலேயே தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதுடன், அது தொடர்பான திருத்தங்களை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் முன்வைத்து நிறைவேற்ற நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.