May 24, 2025 14:41:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட பெருந்தொகை மஞ்சள் கட்டிகள் மீட்பு

இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த, 952 கிலோ மஞ்சள் கட்டி மூடைகள் மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக எருக்கலம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 52 வயது நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட மஞ்சள் கட்டிகள் விசாரணைகளின் பின்னர் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.