
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
இந்தக் கூட்டம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்று வருகின்றது.
கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன், சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சி.வி.கே. சிவஞானம், ப.சத்தியலிங்கம், கே.சயந்தன், குருகுலராயா, சட்டத்தரணி வி.தவராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன் மற்றும் மத்திய குழு முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்
இக்கூட்டத்தில் ஜெனிவா அமர்வுகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.