
கொவிட்-19 வைரஸ் தொற்றால் இலங்கையில் தாதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் வைரஸ் காரணமாக பியந்தி ரம்யா குமாரி என்ற தாதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கண்டி தாதியர் பயிற்சிக் கல்லூரியில் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த இந்தத் தாதி 2001ஆம் ஆண்டு முதல் மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் தாதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் உயிரிழந்த முதலாவது தாதி இவராகும் என அரச தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரை 81ஆயிரத்து 933 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில், இன்னும் மூவாயிரத்து 849 பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 459ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.