முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) அனுர சேனாநாயக்க இன்று காலமானார்.
இவர் சுகயீனம் காரணமாக நீண்ட காலமாக சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அனுர சேனாநாயக்க 1973 ல் இலங்கை பொலிஸ் பிரிவில் இணைந்தார். 08 ஆண்டுகளுக்குப் பிறகு பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். 1985 ஆம் ஆண்டில், தலைமை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டார்.
2008 ஆம் ஆண்டு முதல் கொழும்பு குற்றப்பலனாய்வு பிரிவின் பணிப்பாளராக பணியாற்றியதோடு 2011 ஆம் ஆண்டு டிசம்பரில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றார்.
கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் வழக்கு தொடர்பான சாட்சியங்களை மூடிமறைத்த குற்றச்சாட்டில் அனுர சேனாநாயக்க 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஒரு வருடகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.