உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதி அளிக்கப்படாத நிலையில் சீன மற்றும் ரஷ்ய தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘சினோபோர்மின்’ தடுப்பூசி மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி ஆகியவற்றை இறக்குமதி செய்ய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
இவ் இரு தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கீகாரம் அளித்துள்ள போதிலும் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை இரண்டு தடுப்பூசிகளையும் அவசரக்கால பயன்பாட்டிற்கேனும் அனுமதிக்கவில்லை.
இதே வேளை இந்தியாவிடமிருந்து ஒரு கோடி (பத்து மில்லியன்) அளவிலான கொவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளை பெற சீரம் நிறுவனத்துடன் இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் ஒப்பந்தம் செய்துள்ளது.