January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னேஸ்வரம் ஆலயத்தின் மாசிமகத் திருவிழா

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதும் புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதுமான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னை நாதஸ்சுவாமி ஆலயத்தின் மாசிமகத் திருவிழா இன்று நடைபெற்றது.

இதன்போது வசந்த மண்டப பூஜையைடுத்து ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத சிதம்பர நடராஜ்மூர்த்தி இரதத்திற்கு எழுந்தருளி இரதோற்றசவம் இடம்பெற்றது.

ஆலய பிரதம குருவும் தர்மகர்த்தவுமான பிரம்மஸ்ரீ எஸ்.பந்தமநாபக் குருக்கள் தலைமையில் உற்வசம் நடைபெற்று மங்கள வாத்திய முழங்க இரதம் மாட வீதி வலம் வந்தது.

இதேநேரம் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் சுகாதார வழிமுறையைப் பின்பற்றி கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 10 நாட்கள் உற்சவங்கள் நடைபெற்று வந்ததுடன் இன்று இரததோற்சவம் நடைபெற்றது. நாளையதினம் தீர்த்த உற்சவத்துடன் திருவிழா முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.