
மனித உரிமைகள் தொடர்பான உரையாடலுக்கும், ஏற்கனவே நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கும் இலங்கை வெளிப்படையாக, தயாராக இருக்கின்றது என்பதை தமது நாடு அறிந்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய ரஷ்ய பிரதிநிதி நெரிவித்துள்ளார்.
https://youtu.be/xd3FODzbTBE
“பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வெளியாரின் அழுத்தங்கள் இன்றி, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை தாமாக தீர்மானிக்கக் கூடிய நிலையில் இலங்கை இருக்க வேண்டும்.
சர்வதேச உதவிகள் என்ற அடிப்படையில் ஒத்துழைப்புகள் அமைந்தால் மட்டுமே அவை பலனளிக்கக் கூடியவையாக இருக்கும்”
-என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
“மனித உரிமைகள் தொடர்பில் பிரச்சனைகள் உள்ள நாடுகளில், அந்த நாடுகளை வெளிப்படையான- ஆக்கபூர்வமான பேச்சுவர்த்தைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும்” என்றும் ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் உரையாற்றிய ரஷ்ய பிரதிநிதி தெரிவித்தார்.