November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை இலங்கையின் ‘உள்ளக விவகாரத்தில்’ தலையிடும் நடவடிக்கை என்கிறது சீனா

இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ‘இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் நடவடிக்கை என சீனா தெரிவித்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் உரையாற்றும் போது, சீன தூதுவர் லியு ஜெய்லி இதனைத் தெரிவித்துள்ளார்.

“ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின் பக்கச்சார்புத் தன்மை காரணமாக சீனா கவலையடைந்துள்ளது.

மனித உரிமைகள் விடயத்தில் இரட்டை வேடத்தையும், மனித உரிமை என்ற பேரில் அடுத்தவரின் விடயங்களில் தலையிடுவதையும் சீனா கண்டிக்கின்றது.

ஐநா அறிக்கையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உண்மைத் தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை. அதில் ஆதாரமற்ற தகவல்கள் காணப்படுகின்றன.

ஐநா பக்கச்சார்பின்றி நடந்துகொள்வதையும், நாடுகளின் விடயங்களை அரசியல்மயப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்”

-என்று ஐநாவுக்கான சீனாவின் தூதுவர் லியு ஜெய்லி தனது உரையில் கூறியுள்ளார்.

இதனிடையே, “இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள், நிலையான அபிவிருத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மேம்பாடு, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.