July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைக் குழு அறிக்கையை மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி நிராகரித்தது!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து அது தொடர்பாக விசாரணை நடத்தவென அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, கடந்த ஜனவரி 31 ஆம் திகதியுடன் விசாரணைகளை பூர்த்தி செய்து அதன் இறுதி அறிக்கையை இம்மாதம் முதலாம் திகதி தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சிலருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டுமென்று சட்டமா அதிபருக்கு பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று மாலை கூடிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு அந்த அறிக்கையை நிராகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.