ஐநா ஆணையாளரின் அறிக்கையையும் அதற்கான இலங்கையின் பதிலையும் மதிப்பாய்வு செய்து, இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்திற்கு நிலையான தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் உரையாற்றும் போது, ஐநா மற்றும் ஜெனிவாவில் உள்ள சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் தூதுவர் இந்திரா மணி பாண்டே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“2009 மே முதல் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் 7 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன…
இந்த தீர்மானங்களுக்கான உரையாடல்களில் இந்தியா தீவிரமாக பங்கெடுத்திருக்கின்றது. இலங்கையின் நெருங்கிய நட்பு நாடாகவும் அயல்நாடாகவும் இந்தியா இருந்து வருகின்றது.
இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா நம்புகின்றது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையான நடைமுறைப்படுத்த வேண்டும்.
1- இலங்கையின் ஒற்றுமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு,
2- சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியன தொடர்பான தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கான கடப்பாடுகள்
ஆகிய இரண்டு அம்சங்களின் அடிப்படையிலேயே இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு அமைந்துள்ளது…”
என்றும் ஜெனிவாவுக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.