இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு பதிலளிக்க வேண்டும் என்றால் முதலில் நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கடந்த 12 வருடங்களாக மக்களுடைய உரிமைகளை மறுதலிக்கின்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் தற்போது ஒன்றினைந்து அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் காலத்தில் தெய்வேந்திர முனை தொடக்கம் பருத்தித்துறை வரையான போராட்டத்தை நடத்தவேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.