February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழிற்சங்க நிதி மோசடி வழக்கில் இருந்து அமைச்சர் மகிந்தானந்த விடுதலை

தொழிற்சங்கமொன்றின் நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் நிதி மோசடி வழக்கில் இருந்தே அமைச்சர் மகிந்தானந்த விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

39 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில் கடந்த நான்கு வருடங்களாக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து அமைச்சரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மகிந்தானந்த அலுத்கமகே தொடர்பான குற்றச்சாட்டுகள் சந்தேகங்கள் இன்றி நிரூபிக்கப்படவில்லை என்றும் மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் மகிந்தானந்த அலுத்கமகே மீது நிதி மோசடி தொடர்பான வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.