
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக இது வரையில் 39 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தினத்தில் மாத்திரம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுலும் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி திருத்தத்திற்கு எதிரான அனைத்து மனுக்களும் நாளைய தினம் உயர் நீதிமன்றத்தில் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்படவுள்ளன.