
இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று இரவு கடும் இடி, மின்னலுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம், இன்று பிற்பகல் 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் இந்த அறிவித்தல் அமுலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் கடும் காற்று வீசக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஏற்படக் கூடிய அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ள அவதானத்துடன் செயற்பாடுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.