photo : Facebook / Saliya Pieris
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) 26 ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
2021-2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ் மற்றும் குவேரா டி சொய்சா ஆகிய இருவருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் சாலிய பீரிஸ் 5093 வாக்குகளைப் பெற்று 2707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாடு முழுவதும் 85 சட்டத்தரணிகள் சங்க மையங்களில் வாக்களிப்பு நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் சுமார் 17,000 பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் 2015- 2017 காலப்பகுதியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.