February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன தேர்தலில் போட்டியிடுவதற்கு சீலரதன தேரர் வேட்புமனுத் தாக்கல்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன தேர்தலில் போட்டியிடுவதற்கு பத்தரமுள்ளை சீலரதன தேரர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவிக்காகவே இவர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

வன்னி மாவட்டத்தின் புனித அந்தோனியர் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியே இவர் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு அங்கத்தவர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

பத்தரமுள்ளை சீலரதன தேரர் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களிலும் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.