
இலங்கை முஸ்லிம்களின் இறுதி உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதையிட்டு இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்தின் செயலாளர் யூசுப் அல் உதைமீன் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் உரையாற்றும் போதே, இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு மாற்றமாக, கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க உரிமையை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஐநா தீர்மானங்களுக்கு அமைய அனைத்து சமூகங்களினதும் மத உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் யூசுப் அல் உதைமீன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு இஸ்லாமிய நாடுகளின் ஆதரவையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.