photo : Twitter / Secretary Antony Blinken
ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐநா மனித உரிமைகள் பேரவையை ஊக்குவிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் டோனி பிளின்கென் கூறினார்.
ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில் அதில் உரையாற்றும் போதே அமெரிக்க வெளியுறவுத்துறை இராஜாங்க செயலாளர் டோனி பிளின்கென் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த கால துன்புறுத்தல்கள் மீதான பொறுப்புக்கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி இவ் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு அமெரிக்கா மீண்டும் ஐநா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக இராஜாங்க செயலாளர் கூறினார்.
இதேவேளை, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்று கொண்டுவரப்படும் போது, 18 நாடுகளும் இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.