திலீபன் நினைவேந்தலுக்கான தடையைத் தொடர்ந்து ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகள் வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன.
இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகர், களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, செங்கலடி உள்ளிட்ட தமிழ்ப் பிரதேசங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன.
இப்பகுதி பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைந்தளவே காணப்பட்டது. மக்களின் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது.
இதனிடையே, மாவட்டத்தின் அரச திணைக்களங்கள் மற்றும் வங்கிகள் வழமைப்போல இயங்குகின்றன. வாகனப் போக்குவரத்தும் வழமைப்போல இடம்பெறுகிறது.
பல பிரதேசங்களில் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்ததாக தமிழ் அவனி செய்தியாளர்கள் தெரிவித்தனர்.