May 23, 2025 6:02:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை விவகாரத்தில் சர்வதேச பொறுப்புக்கூறலே அவசியம்: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேச பொறுப்புக்கூறலே தப்போதைய அவசியம் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஜெனிவாவுக்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வெளியுறவு அமைச்சரின் ஐநா உரை சர்வதேச குற்றங்களை மறுப்பதாகவும், கடமைப் பொறுப்புகளைத் தவிர்ப்பதாகவும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை நிராகரிப்பதாகவும் அமைந்துள்ளதாகவும் ஜோன் பிஷர் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சரின் அறிவிப்பு இலங்கையில் உள்ளக பொறுப்புக்கூறல் விடயங்களில் நீதியை நிலைநாட்டுவதற்கான நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்களில் இலங்கை அரசாங்கத்தை எவரும் நம்பத் தயாராக இல்லை என்றும் சர்வதேச பொறுப்புக்கூறலே அவசியம் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.