November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதலீடுகளை கண்காணிப்பதற்கு இரண்டு குழுக்களை நியமித்தது இலங்கை

சிறப்பு அபிவிருத்தி திட்டங்கள் (எஸ்.டி.பி) சட்டத்தின் கீழ் முதலீடுகளை விரைவாக கண்காணிப்பதற்கும் வரிவிலக்கு அளிப்பதற்கும் இரண்டு குழுக்களை நியமித்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளருக்கு கிடைக்கவேண்டிய வரி நிவாரணங்கள் என்ன என்பதையும்,எவ்வளவு கால அவகாசம்,மற்றும்கொண்டு வந்த முதலீடுகள்,தொழிலாளர் தள்ளுபடிகள் குறித்தும் இந்த குழுக்களின் பிரதிநிதிகள் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த குழுவில் ஒன்றுக்கு செயலாளர் நாயகமாக எஸ். ஆர். அட்டிகல்ல தலைமை தாங்குவார்.பொது நிறுவனத்துறை இயக்குநராக ஜெனரல் பி. அத்துல குமார மற்றும் விசாக அமரசேகர, கூடுதல் இயக்குநர் ஜெனரல்,மூலதன சந்தை, வெளி வளத்துறையின் முதலீடுகள் குழுவுக்கு இணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சின் செயலாளர் சிரினிமல் பெரேரா, மின் அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, தொழிலாளர் அமைச்சின் செயலாளர் மாபா பதிரன, கருவூலத்தின் துணை செயலாளர் ஆர்.எம்.பி. ரத்நாயக்க மற்றும் முதலீட்டு வாரியத்தின் (பிஓஐ) சஞ்சயா மொஹட்டாலா ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மின்சார சபையின் முன்னாள் செயலாளர் எம்.எம்.சி ஃபெர்டினாண்டோ, நெடுஞ்சாலை துறை முன்னாள் செயலாளர் இவான் சில்வா மற்றும் நிஹால் ஜெயவர்தன ஆகியோரைக் கொண்ட முக்கிய பொருளாதாரத் துறைகள் குறித்த திட்ட மேலாண்மைக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்..