இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகளில் உறங்கல் இருக்கை முன்பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில் உறங்கல் இருக்கை பெட்டிகளின் படுக்கைகள் மற்றும் ஆசனங்களை சுத்திகரிக்கும் பணிகள் இதுவரையில் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கொவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த செயற்பாடு இடைநிறுத்தப்பட்டிருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான தற்காலிக அல்லது நிரந்தர தீர்வோ காணப்படாத நிலையில் இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகளை இடை நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பயணிகளின் சிரமம் கருதி தீர்வினை பெற்றுத்தரும் படி பொறுப்பான அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.