
வடக்கு-கிழக்கில் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்கள் இன்றைய தினம் வழமைபோன்று இயங்கின.
கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை , சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், மாவடிப்பள்ளி , மத்தியமுகாம் ஆகிய பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் வழமைப்போன்று திறந்திருந்தன.

அத்துடன் இந்த மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்தும் வழமைப்போன்று இயங்கியது.
எனினும் சில பிரதேசங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
